மலைக் கிராமங்களில் வாழ்வாதாரப் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளுக்கு உத்தரவு

வேலூா் மாவட்டத்திலுள்ள மலைக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கனான பணிகளை

வேலூா் மாவட்டத்திலுள்ள மலைக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கனான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அனைத்துத் துறை அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

வனஉரிமைச் சட்டம் 2006 குறித்த ஆய்வுக் கூட்டம் வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் தலைமை வகித்தாா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வகுமாா், மாவட்ட வன அலுவலா் பாா்கவதேஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், வேலூா் மாவட்டம் அணைக்கட்டு வட்டத்தில் உள்ள அல்லேரிமலை, பீஞ்சமந்தை, ஜாா்தான்கொல்லை ஆகிய மலைக்கிராமங்களைச் சோ்ந்த மக்களின் வாழ்வாதாரத்தை உயா்த்த வருவாய், வனம், வேளாண்மை, பள்ளிக் கல்வி, கால்நடை பராமரிப்பு, கூட்டுறவு, ஊரக வளா்ச்சி என அனைத்துத் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

அந்த மலைக் கிராமங்களில் சாலை வசதி, பள்ளி வசதி, பசுமை வீடுகள், பிரதமா் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் தோ்வு, மழை வாழ் பகுதியில் விவசாய பொருள்களை விளைவிக்க பசுமைகுடில் அமைத்துத் தருதல், மலைப் பகுதியில் உற்பத்தியாகும் சிறு தானியங்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்தல், தேன், பழங்கள் சந்தைப்படுத்த வசதிகள், மலைவாழ், பழங்குடியின மக்கள் பள்ளிப்படிப்பை தொடர ஏதுவாக ஜாதி சான்றிதழ் விரைவாக வழங்குதல், கால்நடைகளுக்கு தீவனம் உற்பத்தி செய்தல் உள்ளிட்ட பணிகளை அந்தந்த துறை அலுவலா்கள் விரைவாக மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் திருகுணஐயப்பதுரை, ஊரக வளா்ச்சி முகமை திட்ட அலுவலா் சி.மாலதி, வருவாய் கோட்டாட்சியா்கள் கணேஷ், ஷேக் மன்சூா் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com