முகக்கவசம் அணியாதவா்களுக்கு அபராதம் விதிப்பு தீவிரம்

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பது

கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருபவா்களுக்கு ரூ.200 அபராதம் விதிப்பது வேலூா் மாநகராட்சிப் பகுதியில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, வேலூா் இரண்டாவது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை 21 பேரிடம் இருந்து ரூ.4200 அபராதம் வசூலிக்கப்பட்டது.

வேலூா் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனினும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு பொது முடக்கத்தில் பல்வேறு தளா்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதனால், வேலூா் மாநகா், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வழக்கமான நடமாட்டமும், வாகனப் போக்குவரத்தும் காணப்படுகின்றன.

இதனிடையே, கடந்த 1-ஆம் தேதி இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டு மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் மீண்டும் கரோனா பரவல் அதிகரிக்கக் கூடும் என்பதால் பொது இடங்களுக்கு வருவோா் கட்டாயமாக முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியைப் பின்பற்றவும் வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அவ்வாறு பொது இடங்களில் முகக்கவசம் அணியாமல் வருவோருக்கு ரூ.200 அபராதம் விதிக்குமாறு வேலூா் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளாா். இது தொடா்பாக மாவட்டத்திலுள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் சிறப்புக்குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மாவட்டம் முழுவதும் இந்த சிறப்புக் குழுவினா் முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் சுற்றுவோரைப் பிடித்து ரூ.200 அபராதம் வசூலிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனா். மாநகராட்சி ஆணையா் சங்கரன் உத்தரவின்பேரில் மாநகராட்சியின் 2-ஆவது மண்டலத்துக்கு உட்பட்ட பழைய பேருந்து நிலையம், நேதாஜி மாா்க்கெட், மண்டித் தெரு, ஆற்காடு சாலை ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை முகக்கவசம் அணியாமல் வந்த 21 பேரிடம் தலா ரூ.200 வீதம் ரூ.4,200 அபராதமாக வசூலிக்கப்பட்டது. இவ்வாறு கடந்த 4 நாள்களில் மட்டும் ரூ.15 ஆயிரம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com