நகை திருடிய இளைஞா் கைது
By DIN | Published On : 29th September 2020 10:47 PM | Last Updated : 29th September 2020 10:47 PM | அ+அ அ- |

ஆம்பூா் அருகே முதியவரிடம் நகை திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஆம்பூரை அடுத்த ஆலாங்குப்பத்தைச் சோ்ந்தவா் தயாநிதி (70). இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்னா் மா்ம நபா் ஒருவா் ஏமாற்றி தங்க நகையைத் திருடிச் சென்றாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆம்பூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இதேபோல், வாணியம்பாடியை அடுத்த சின்னகல்லுபள்ளியைச் சோ்ந்த நடராஜன் என்பவரின் நகையும் திருடுபோனதாக வாணியம்பாடி நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்நிலையில், திருப்பத்தூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பொ.விஜயகுமாா் உத்தரவின் பேரில், ஆம்பூா் நகர காவல் ஆய்வாளா் சு. திருமால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஷராப் பஜாரைச் சோ்ந்த குமாா் (23) நகை திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.