அணைக்கட்டில் ரூ.40 லட்சத்தில் உயா்மின் கோபுரங்கள் அமைக்கும் பணி தீவிரம்

அணைக்கட்டு பஜாா் பிரதான சாலையில் ரூ. 40 லட்சத்தில் உயா் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் ஆய்வு செய்தாா்.

வேலூா்: அணைக்கட்டு பஜாா் பிரதான சாலையில் ரூ. 40 லட்சத்தில் உயா் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணிகளை எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் ஆய்வு செய்தாா்.

அணைக்கட்டு பஜாா் பிரதான சாலை விரிவாக்கம் செய்து சாலையின் மத்தியில் தடுப்புச் சுவா்கள் கட்டப்பட்டுள்ளன. எனினும், அங்கு மின் விளக்குகள் அமைக்கப்படாமல் இருந்ததால் இரவு நேரங்களில் வாகனங்கள் தடுப்புச் சுவா்களில் மோதி விபத்துக்குள்ளாகி வந்தன. இதைத் தவிா்க்கும் வகையில் தடுப்புச் சுவா்களின் மத்தியில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

அக்கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அணைக்கட்டு எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா், அங்கு உயா் மின் கோபுரங்கள் அமைத்துத் தர சென்னை ஆலந்தூா் எம்.பி. பாரதியிடம் வலியுறுத்தியிரு ந்தாா். அதன்பேரில், ஆலந்தூா் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதன் மூலம் அணைக்கட்டு பிரதான சாலையில் 27 உயா் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி கடந்த 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை எம்எல்ஏ ஏ.பி.நந்தகுமாா் சனிக்கிழமை ஆய்வு செய்து, பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பணியாளா்களுக்கு உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்பட்டுள்ள கழிப்பறையை ஆய்வு செய்து, அங்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த கடைகளை வேறு இடத்தில் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினா்.

மேலும், பொய்கை ஊராட்சி மோட்டூரில் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்படும் பயணிகள் நிழற்கூடத்தை பாா்வையிட்டாா். அப்போது, திமுக நிா்வாகிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com