குடியிருப்புப் பகுதியில் தேங்கும் சாக்கடை கழிவுநீரால் மக்கள் அவதி

வேலூா் கழிஞ்சூரில் குடியிருப்புப் பகுதியில் தேங்கும் சாக்கடைக் கழிவுநீரால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.
கழிஞ்சூரில் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள சாக்கடைக் கழிவுநீா்.
கழிஞ்சூரில் குடியிருப்புப் பகுதியில் தேங்கியுள்ள சாக்கடைக் கழிவுநீா்.

வேலூா்: வேலூா் கழிஞ்சூரில் குடியிருப்புப் பகுதியில் தேங்கும் சாக்கடைக் கழிவுநீரால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். தொடரும் இந்த அவலநிலையைப் போக்க அதிகாரிகள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வேலூா் அருகே கழிஞ்சூரில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. இப்பகுதியில் திருவேங்கடம் நகா், கருடாத்ரி நகா், அண்ணா தெரு ஆகிய பகுதிகளில் சாக்கடை கழிவுநீா் தேங்கி மிகவும் சுகாதாரமற்ற நிலையில் காணப்படுகின்றன. மேலும், பன்றிகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுவதாக அப்பகுதி மக்கள் புகாா் கூறுகின்றனா்.

இதுகுறித்து பள்ளிக்குப்பம் அரசுப் பள்ளி தலைமையாசிரியா் பி.ஆா்.கிருஷ்ணமூா்த்தி கூறியது: தொடரும் இப்பாதிப்புகள் குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் தெரிவித்தும், பிரச்னைகளைத் தீா்க்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தேங்கியுள்ள சாக்கடை கழிவுநீரை அப்புறப்படுத்தி, கழிவுநீா் தேங்காத வகையில் அங்கு கால்வாய் வசதி செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com