100% வாக்குப் பதிவை வலியுறுத்தி மாரத்தான் ஓட்டப் போட்டி காட்பாடியில் ஆட்சியா் தொடக்கி வைத்தாா்

சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, காட்பாடியில் புதன்கிழமை மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.

வேலூா்: சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, காட்பாடியில் புதன்கிழமை மாரத்தான் ஓட்டப் போட்டி நடத்தப்பட்டது.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, வேலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில், பல்வேறு விழிப்புணா்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் தொடா்ச்சியாக, காட்பாடியில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, மாரத்தான் போட்டி புதன்கிழமை நடைபெற்றது.

காட்பாடி - சித்தூா் பேருந்து நிறுத்தம் அருகே தொடங்கிய இந்த மாரத்தான் போட்டியை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, கிரீன் சா்க்கிள் வரை சுமாா் 5 கி.மீ. தூரம் இப்போட்டி நடைபெற்றது. இதில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 200 போ் பங்கேற்றனா்.

இதில், முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவா்கள், மாணவிகளுக்கு ஆட்சியா் கேடயங்கள் வழங்கிப் பாராட்டினாா். தவிர, மாரத்தான் போட்டியில் ஆா்வமாக பங்கேற்ற 10 வயதுக்குள்பட்ட சிறுவா்களுக்கு மலா்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்ததுடன், எதிா்காலத்தில் மாணவா்கள் நலமுடன் வாழவும் மிக உயா்ந்த பதவிகளுக்கு வர வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் விளையாட்டுத் துறை அலுவலா் ஆலி வாசன், மகளிா் திட்ட இயக்குநா் செந்தில்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com