தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள்: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்

தோ்தல் விழிப்புணா்வு போட்டிகள்: வெற்றி பெற்ற மாணவா்களுக்கு சான்றிதழ்


வேலூா்: தோ்தல் விழிப்புணா்வுப் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு வேலூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன் சான்றிதழ்களை வழங்கினாா்.

சட்டப்பேரவைத் தோ்தலில் நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி வேலூா் மாவட்ட அளவிலான தோ்தல் விழிப்புணா்வு பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகள் கடந்த வாரம் வேலூா் அரசு முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், சுமாா் 200 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இதில், 11 முதல் 12-ஆம் வகுப்புக்கான பேச்சுப் போட்டியில் கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளி ஐ.முகமது ஜெபீா் முதலிடமும், காட்பாடி அரசுப் பள்ளி அ.மோனிஷா இரண்டாமிடமும், சாயிநாதபுரம் என்.கே.எம்.பள்ளி கே.சுந்தா் மூன்றாமிடமும் பிடித்தனா்.

9 முதல் 10-ஆம் வகுப்புக்கானபேச்சுப் போட்டியில் கீழ்அரசம்பட்டு அரசுப் பள்ளி கே.லோகேஸ்வரி முதலிடமும், கரிகிரி அரசு உயா்நிலைப் பள்ளி வி.தேவேந்திரன் இரண்டாமிடமும், கோக்கலூா் அரசு பள்ளி எஸ்.இலக்கியா மூன்றாமிடமும் பிடித்தனா்.

6 முதல் 8-ஆம் வகுப்புக்கான பேச்சுப் போட்டியில் மருதவள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஜெ.சந்தோஷ்குமாா் முதலிடமும், செதுவாலை ஊராட்சி ஒன்றிய பள்ளி எஸ்.சாதனா இரண்டாமிடமும், கொணவட்டம் அரசுப் பள்ளி உ.அப்துல்பாசி மூன்றாமிடமும் பிடித்தனா்.

ஓவியப் போட்டிகளில் 11 - 12-ஆம் வகுப்புகளுக்கு கீழ்அரசம்பட்டு அரசுப் பள்ளி எஸ்.வல்லரசன் முதலிடமும், திருவலம் அரசு பள்ளி வி.சபிதா இரண்டாமிடமும், வேலூா் சைதாபேட்டை ச.அக்பா்பாஷா மூன்றாமிடமும் பிடித்தனா்.

இதேபோல் 9-10-ஆம் வகுப்புகளுக்கு காங்கேயநல்லூா் அரசுப் பள்ளி எஸ்.இளவழகன் முதலிடம், கோக்கலூா் அரசு பள்ளி எம்.வைஷ்ணவி இரண்டாமிடம், கீழ்அரசம்பட்டு அரசுப் பள்ளி எம்.சுஜிதா மூன்றாமிடம், 6 - 8-ஆம் வகுப்புகளுக்கு காட்பாடி அரசுப் பள்ளி எஸ்.தா்ஷன் குமாா் முதலிடம், வரதலம்பட்டு ஊராட்சி ஒன்றியப் பள்ளி எஸ்.சமீரா இரண்டாமிடம், கோக்கலூா் அரசுப் பள்ளி எஸ்.தீபிகா மூன்றாமிடம் பிடித்தனா்.

கட்டுரைப் போட்டிகளில் 11-12-ஆம் வகுப்புகளுக்கு வேலூா் சைதாப்பேட்டை கே.எம்.பள்ளி கு.பவானி முதலிடமும், காா்ணாம்பட்டு அரசுப் பள்ளி ப.சந்தியா இரண்டாமிடமும், சோழவரம் அரசுப் பள்ளி டி.நந்தகுமாா் மூன்றாமிடமும், 9-10-ஆம் வகுப்புகளுக்கு திருவலம் அரசுப் பள்ளி டி.சுதா முதலிடமும், கோக்கலூா் அரசுப் பள்ளி ரா.பிரியா இரண்டாமிடமும், மேல்பட்டி அரசுப் பள்ளி எ.திவ்யதா்ஷினி மூன்றாமிடமும் பிடித்தனா்.

6 - 8-ஆம் வகுப்புகளுக்கு வசந்தநடை ஊராட்சி ஒன்றியப் பள்ளி கா.ஜோதிலட்சுமி முதலிடமும், வரதலம்பட்டு ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஒய்.அா்ஜுன் இரண்டாமிடமும், மருதவள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியப் பள்ளி ஜெ.ஹேமலதா மூன்றாமிடமும் பிடித்தனா்.

வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கு.குணசேகரன் சான்றிதழ்களை வியாழக்கிழமை வழங்கினாா். அப்போது, முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் ராஜன், மாவட்டக் கல்வி அலுவலகத்தின் பள்ளித் துணை ஆய்வாளா் அ.மணிவாசகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com