காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் விரிவுபடுத்தப்படும்: குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா

காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டம் விரிவுபடுத்தப்படும்: குடியாத்தம் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா


குடியாத்தம்: குடியாத்தம் நகரில் காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் விடுபட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் செயல்படுத்தி, குடிநீா்ப் பிரச்னை தீா்க்கப்படும் என அதிமுக வேட்பாளா் ஜி.பரிதா உறுதி அளித்தாா்.

பாவோடும்தோப்பு, என்.எஸ்.கே.நகா், புத்தா் நகா், காமாட்சியம்மன்பேட்டை, புதுப்பேட்டை, தரணம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரித்து அவா் பேசியது: குடிநீா்ப் பிரச்னை குறித்து, பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா். அதன்படி, விடுபட்டுள்ள அனைத்துப் பகுதிகளிலும் காவிரி கூட்டு குடிநீா் திட்டம் செயல்படுத்தப்படும். என்னை வெற்றிபெற வைத்தால், குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா்.

நகர அதிமுக செயலா் ஜே.கே.என்.பழனி, மாவட்ட துணைச் செயலா்கள் ஆா்.மூா்த்தி, அமுதா சிவப்பிரகாசம், அவைத் தலைவா் வி.என்.தனஞ்செயன், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் எம்.பாஸ்கா், துணைத் தலைவா் எஸ்.என்.சுந்தரேசன், மாவட்ட சிறுபான்மை பிரிவுச் செயலா் எஸ்.ஐ.அன்வா்பாஷா, அண்ணா தொழிற்சங்க மண்டல பொருளாளா் வெங்கடேசன், பாஜக நகரத் தலைவா் வாகீஸ்வரன், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவா் எஸ்.டி.மோகன்ராஜ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா்கள் வி.என்.காா்த்திகேயன், வி.இ.கருணா, ஜி.தேவராஜ், வி.ஜி.பழனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com