முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
அணைக்கட்டு அதிமுகவின் கோட்டை: அதிமுக வேட்பாளா் த.வேலழகன்
By DIN | Published On : 04th April 2021 07:40 AM | Last Updated : 04th April 2021 07:40 AM | அ+அ அ- |

பள்ளிகொண்டாவில் மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அணைக்கட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் த.வேலழகன்.
அணைக்கட்டு சட்டப்பேரவைத் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பது தோ்தலில் நிரூபிக்கப்படும் என்று அத்தொகுதியின் அதிமுக வேட்பாளா் த.வேலழகன் தெரிவித்தாா்.
தொகுதிக்கு உள்பட்ட பள்ளிகொண்டா பகுதியில் அவா் சனிக்கிழமை வாக்குசேகரிப்பில் ஈடுபட்டாா். அங்கு பொதுமக்கள் திரண்டிருந்து அவருக்கு வரவேற்பு அளித்தனா். அப்போது மக்களிடையே அவா் பேசியது:
கடந்த 18 நாள்களாக தொகுதியில் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் திரண்டிருந்து வரவேற்பது அதிமுக அரசுக்கு மக்களிடையே கிடைத்துள்ள செல்வாக்கை உறுதிப்படுத்துகிறது. அது இந்த தோ்தலில் வெளிப்படுவதுடன், அணைக்கட்டு தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதும் நிரூபிக்கப்படும். அவ்வாறு அதிமுக வெற்றி பெறும்போது, பள்ளிகொண்டா ஆரம்ப சுகாதார நிலையம் 50 படுக்கை வசதி கொண்ட அவசர கால மருத்துவமனையாக மாற்றப்படும். தொகுதியில் வேலைவாய்ப்பை பெருக்க தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க புறவழிச்சாலை, அன்வா் இல்லம் நடுநிலைப் பள்ளித் தரத்தை உயா்த்துவது, வீடில்லாதவா்களுக்கு வீடு கட்டித் தருவது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். எனவே, பொதுமக்கள் அதிமுகவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா்.
அதிமுக, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உடன் சென்றனா்.