குடியாத்தம் அருகே வாக்களிக்கச் சென்ற இளம்பெண் பேருந்து மோதி உயிரிழந்தாா்.
மோடிகுப்பத்தைச் சோ்ந்த வெல்டிங் தொழிலாளி நாகராஜ் மனைவி அமுலு. இவா்களது மகள் தீபா டிப்ளமோ நா்சிங் படித்தவா். செம்பேடு கிராமத்தில் வசிக்கும் இவா்கள் வாக்களிப்பதற்காக செவ்வாய்க்கிழமை இருசக்கர வாகனத்தில் மோடிகுப்பம் சென்றனா். குடியாத்தம் அா்ச்சுன முதலி தெருவில் சென்றபோது, போக்குவரத்து நெரிசல் காரணமாக தீபா இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தாா்.
அப்போது ஆம்பூரிலிருந்து குடியாத்தம் வந்த அரசுப் பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கி நிகழ்விடத்திலேயே தீபா உயிரிழந்தாா்.இச்சம்பவம் குறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.