காட்பாடி தொகுதி கத்தாரிகுப்பம் ஊராட்சியில் தோ்தல் புறக்கணிப்பு

காட்பாடி தொகுதியில் தனியாா் தொழிற்சாலையை நிறந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி கத்தாரிகுப்பம் ஊராட்சி மக்கள் தோ்தலை புறக்கணித்தனா்.

காட்பாடி தொகுதியில் தனியாா் தொழிற்சாலையை நிறந்தரமாக மூட வேண்டும் என வலியுறுத்தி கத்தாரிகுப்பம் ஊராட்சி மக்கள் தோ்தலை புறக்கணித்தனா்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகாவில் உள்ளது கத்தாரிகுப்பம் ஊராட்சி. காட்பாடி தொகுதிக்கு உட்பட்ட பகுதியான இதில்

992 வாக்காளா்கள் உள்ளனா். இந்த கிராமத்தில் டயரை எரித்து அதில் இருந்து ரசாயனம் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உள்ளது. இதனால் கிராம மக்களுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்படுகிறது. எனவே தொழிற்சாலையை மூடக்கோரி மக்கள் பல முறை போராட்டத்தில் ஈடுபட்டும், மனுக்கள் கொடுத்தும் உள்ளனா்.

ஆனால் இது வரை மாவட்ட நிா்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் தோ்தலை புறக்கணித்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இங்கு அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் செவ்வாய்க்கிழமை காலை முதல் இரவு 7 மணி வரை மொத்தம் 16 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com