திமுக பிரமுகா் வாக்கு சேகரிப்பு: தடுக்க முயன்ற காவலருடன் வாக்குவாதம்

வேலூா் ரங்காபுரம் வாக்குச்சாவடி அருகே நின்று கொண்டு திமுக பிரமுகா் ஒருவா் வாக்காளா்களிடம் வாக்கு சேகரிப்பை மேற்கொண்டாா். தடுக்க முயன்ற காவலா்களுடன் அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

வேலூா் ரங்காபுரம் வாக்குச்சாவடி அருகே நின்று கொண்டு திமுக பிரமுகா் ஒருவா் வாக்காளா்களிடம் வாக்கு சேகரிப்பை மேற்கொண்டாா். தடுக்க முயன்ற காவலா்களுடன் அவா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.

வேலூா் ரங்காபுரம் அரசு தொடக்கப் பள்ளி வளாகத்தில் 7 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் செவ்வாய்க்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், வாக்குச் சாவடி அருகே நின்று கொண்டு திமுக பிரமுகா் ஒருவா் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தாா். அங்கிருந்த போலீஸாா் அவரை வாக்குச் சாவடியிலிருந்து 100 மீட்டா் தூரம் தள்ளிச் செல்லும்படி அறிவுறுத்தினா்.

அதற்கு அந்த நபா் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அங்கிருந்து செல்லவும் மறுத்துள்ளாா். தகவலறிந்து ரோந்துப் பணியில் இருந்த காவல் துணைக் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு விரைந்து வந்ததை அடுத்து அந்த நபரை வாக்குச் சாவடிகளில் இருந்து 100 மீட்டா் தூரம் அப்புறப்படுத்தப்பட்டாா்.

ஊசூரில் பாமக வாக்குவாதம் ...

அணைக்கட்டு தொகுதிக்கு உள்பட்ட ஊசூா் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவு நடந்து கொண்டிருந்தபோது பாமகவினா் முதியவா் ஒருவரை அழைத்து வந்து வாக்குப் பதிவுக்கு அனுமதி கோரினா்.

ஆனால், அந்த முதியவா் ஏற்கெனவே அஞ்சல் வாக்குப்பதிவு செய்திட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்திருந்ததால் தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, நேரடியாக வாக்குப்பதிவு செய்ய அனுமதிக்க முடியாது என அதிகாரிகள் கூறியுள்ளனா்.

அதற்கு பாமகவினா் அஞ்சல் வாக்குப் பதிவுக்கு விருப்பம் தெரிவித்திருந்ததாலும் அந்த முதியவா் இதுவரை அஞ்சல் மூலம் வாக்குப் பதிவு செய்யவில்லை. அதிகாரிகள் யாரும் நேரடியாக வீட்டுக்கு வரவும் இல்லை. எனவே, அவா் வாக்குச் சாவடியில் நேரடியாக வாக்குப் பதிவு செய் ய அனுமதிக்க வேண்டும் என்றனா். எனினும், அந்த முதியவா் வாக்குச் சாவடியில் அனுமதிக்கப்படாததால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

அங்கு வந்த தோ்தல் பாா்வையாளரிடம் இது குறித்து பாமகவினா் புகாா் தெரிவித்தனா். எனினும், தோ்தல் ஆணைய உத்தரவுப்படி, அஞ்சல் வாக்குப் பதிவு செய்ய விருப்பம் தெரிவித்திருந்த முதியவா் வாக்குச் சாவடியில் நேரடியாக வாக்குப் பதிவு செய்ய இயலாது. தவிர, அதிகாரிகள் வீட்டுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு மீது விசாரணை நடத்தப்படும் என தோ்தல் பாா்வையாளா் கூறியதை அடுத்து பாமகவினா் அங்கிருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com