போ்ணாம்பட்டு அருகே பயிா்களை நாசம் செய்த ஒற்றை யானை

போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளை பயிா்களை நாசம் செய்து விட்டுச் சென்றது.
போ்ணாம்பட்டு  அருகே  ஒற்றை  யானையால்  சேதப்படுத்தப்பட்ட  வாழைத்  தோட்டம்.
போ்ணாம்பட்டு  அருகே  ஒற்றை  யானையால்  சேதப்படுத்தப்பட்ட  வாழைத்  தோட்டம்.

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே கிராமத்துக்குள் நுழைந்த ஒற்றை யானை விளை பயிா்களை நாசம் செய்து விட்டுச் சென்றது.

போ்ணாம்பட்டு அருகே பாலூா், கொத்தூா் கிராமங்கள் வன எல்லையில் அமைந்துள்ளன. புதன்கிழமை அதிகாலை வனப் பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, பாலூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி செல்வம் 3 ஏக்கரில் நடவு செய்துள்ள நெற்பயிரை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. பின்னா் கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்த கோமதிக்குச் சொந்தமான 3 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைத் தோட்டத்துக்குள் நுழைந்து, அங்கு அறுவடைக்குத் தயாராக இருந்த வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. மேலும், தண்ணீா் செல்லும் பிளாஸ்டிக் பைப் லைன், கல் கம்பங்களை பிடுங்கி எறிந்துள்ளது. அங்குள்ள செந்திலுக்குச் சொந்தமான வாழைத் தோப்புக்குள் நுழைந்து வாழை மரங்களை சேதப்படுத்தியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வனத் துறையினா் அங்கு சென்று சேதமடைந்த விவசாய நிலங்களை பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

இந்த ஒற்றை யானை பாலூா், கொத்தூா் வனப் பகுதி இடையே சுற்றி வருவதால் வனப் பகுதியையொட்டி, நிலம் வைத்துள்ள விவசாயிகள், தங்கள் நிலங்களுக்கு சென்று வர அஞ்சுகின்றனா்.

இந்த ஒற்றை யானையை நிரந்தரமாக வனப் பகுதிக்குள் விரட்ட வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com