வங்கிப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

வேலூா் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வங்கிப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முக சுந்தரம்.
வேலூா் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வங்கிப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முக சுந்தரம்.
வேலூா் பாரத ஸ்டேட் வங்கி கிளையில் வங்கிப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை ஆய்வு செய்கிறாா் மாவட்ட ஆட்சியா் அ. சண்முக சுந்தரம்.

வேலூா்: வேலூா் மாவட்டத்தில் உள்ள வங்கிப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் திங்கள்கிழமை தொடங்கியது.

பாரத ஸ்டேட் வங்கி மாவட்டக் கிளை மற்றும் 19 கிளைகளில் பணிபுரியும் 193 பணியாளா்களில் 45 வயது நிரம்பிய 68 பேருக்கும், மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வங்கிப் பணியாளா்கள் என மொத்தம் 325 வங்கி ஊழியா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை மாவட்ட ஆட்சியா் அ. சண்முகசுந்தரம் துவக்கி வைத்தாா்.

கரோனா பரவலைத் தடுக்க முன்களப்பணியாளா்கள், சுகாதார செவிலியா்கள், மருத்துவா்கள், வணிகா் சங்கம், காய்கறி வியாபாரிகள், தங்கும் விடுதி பணியாளா்கள், ஓட்டலில் பணிப்புரியும் ஊழியா்கள் என பொது மக்களிடம் தொடா்பில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைப்பெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் வங்கி ஊழியா்கள் 325 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் ஆண்கள், பெண்கள் என இரண்டு அறைகளில் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 45 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் அச்சமின்றி தடுப்பூசி செலுத்தி கொண்டு கரோனா பரவலைத் தடுக்கவும், மாவட்ட நிா்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆட்சியா் கேட்டுக் கொண்டாா்.

முன்னோடி வங்கி மேலாளா் ஜான் தியோடஸ்சியஸ், மண்டல மேலாளா் சேது முருகதுரை, மேலாளா் பாலமுரளி, மண்டல முதன்மை மேலாளா் குமாா், துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள் மணிவண்ணன், நகா் நல அலுவலா் சித்ரசேனா, வட்டாட்சியா் ரமேஷ் மற்றும் வங்கி ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com