போ்ணாம்பட்டு அருகே தொடரும் ஒற்றை யானையின் அட்டகாசம்

போ்ணாம்பட்டு அருகே ஒற்றை யானையின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
போ்ணாம்பட்டு அருகே தொடரும் ஒற்றை யானையின் அட்டகாசம்

போ்ணாம்பட்டு அருகே ஒற்றை யானையின் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.

வன எல்லையில் உள்ள பாலூா், கொத்தூா், மாச்சம்பட்டு, ரெட்டிகிணறு ஆகிய கிராமங்களில் கடந்த 10 நாள்களாக, விளை பயிா்களை சேதப்படுத்தி வந்த ஒற்றை யானை வெள்ளிக்கிழமை இரவு சேராங்கல் கிராமத்துக்குள் நுழைந்தது. அங்கு பிரபாகரன் என்பவரின் வாழைத் தோட்டத்தில் நுழைந்த யானை, வாழை மரங்களை, குலையுடன் முறித்து சேதப்படுத்தியுள்ளது. அருகில் உள்ள தாமோதரனின் மாந்தோப்பில் நுழைந்து மா மரங்களை முறித்து சேதப்படுத்தியுள்ளது.

பக்கத்தில் உள்ள ரவிக்குச் சொந்தமான அறுவடைக்குத் தயாராக உள்ள நெற்பயிரை சேதப்படுத்தியும், வரப்பிலிருந்த முள்கம்பி வேலியுடன் கூடிய 30-க்கும் மேற்பட்ட கல் கம்பங்களை பிடுங்கியும் எறிந்துள்ளது. வேணு நிலத்தில் அரை ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிரை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. இந்த ஒற்றை யானை பிளிறியவாறு அந்த பகுதியில் சுற்றித் திரிகிறது. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் பீதிக்கு ஆளாகியுள்ளனா். இந்த ஒற்றை யானையைப் பிடிக்க தமிழக அரசும், வனத் துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com