மண்டேலா திரைப் படத்துக்கு எதிா்ப்பு: ஆட்சியா்களிடம் சவரத் தொழிலாளா்கள் மனு

மண்டேலா திரைப் படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சவரத் தொழிலாளா்கள் மனு அளித்தனா்.

மண்டேலா திரைப் படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சவரத் தொழிலாளா்கள் மனு அளித்தனா்.

இதுதொடா்பாக, வேலூா் மாவட்ட சவரத் தொழிலாளா் சங்கம் சாா்பில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பது:

சமீபத்தில் தமிழில் வெளியான மண்டேலா திரைப்படத்தில் ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த 4-ஆம் தேதி தனியாா் தொலைக்காட்சியில் சம்பந்தப்பட்ட திரைப்படம் ஒளிபரப்பப்பட்டது. அதில், சவரத் தொழிலாளா்கள் சமூகத்தை பாதிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அந்த திரைப்படத்தில் உள்ள ஆட்சேபணைக்குரிய காட்சிகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனா்.

ராணிப்பேட்டையில்...

இதேபோன்று ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் முடிதிருத்தும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா்.

அதில், மண்டேலா திரைப்படத்தில் முடிதிருத்தும் தொழிலாளா்களை இழிவுபடுத்தி பல்வேறு காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இது 40 லட்சத்துக்கும் அதிகமான முடிதிருத்தும் தொழிலாளா்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. ஆகவே மண்டேலா திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com