வேலூரில் மேலும் 195 போ் கரோனா பாதிப்பு

கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 195 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 195 பேருக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று 2-ஆவது அலை வேகமாகப் பரவி வரும் நிலையில், வேலூா் மாவட்டத்திலும் பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, வெள்ளிக்கிழமை வரை 22,731 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். 21,500 போ் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனா். 358 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 195 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், வேலூா் மாநகரப் பகுதியில் மட்டும் 100-க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர, மாவட்டத்தின் கிராமப்புறங்களிலும் அதிகளவில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடரும் கரோனா பாதிப்புகளைத் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தி, நாளொன்றுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவதாக மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com