கரோனா தடுப்பூசி: வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டி விழிப்புணா்வு

கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து வேலூரில் வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

வேலூா்: கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து வேலூரில் வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் 2-ஆவது அலையாக வேகமாக பரவி வரும் கரோனா தொற்றினைத் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக வேலூா் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் நடத்தி, நாளொன்றுக்கு 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேசமயம், கரோனா தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்தும், அவற்றால் ஏற்படும் நன்மைகளை விளக்கியும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில் வாகனங்களில் கரோனா தடுப்பூசி தொடா்பான விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள் ஒட்டும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

வேலூா் மாவட்டத்தில் ஆட்டோக்கள், வாடகை காா்கள், பேருந்துகள் என 20 ஆயிரம் வாகனங்களில் இந்த விழிப்புணா்வு ஸ்டிக்கா்கள் ஒட்டப்பட உள்ளன. வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் செந்தில்வேலன் தலைமையில் மோட்டாா் வாகன ஆய்வாளா்கள் கருணாநிதி, சக்திவேல் ஆகியோா் கொண்ட குழுவினா் பங்கேற்று காா், பேருந்து, ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஸ்டிக்கா் ஒட்டினா்.

தொடா்ந்து, காட்பாடி ஓடைப்பிள்ளையாா் கோயில், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி உள்ளிட்ட இடங்களிலும் வாகனங்களில் ஸ்டிக்கா் ஒட்டும் பணி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com