ஒற்றை யானையின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

போ்ணாம்பட்டு அருகே விளைபயிா்களை சேதப்படுத்தும் ஒற்றை யானையின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.
ஒற்றை யானையின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே விளைபயிா்களை சேதப்படுத்தும் ஒற்றை யானையின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

பாலூா், கொத்தூா், மாச்சம்பட்டு, ரெட்டிகிணறு, சேராங்கல் உள்ளிட்ட கிராமங்கள் வனப்பகுதி எல்லையில் அமைந்துள்ளன. கடந்த 13 நாள்களாக இரவு நேரங்களில் இக்கிராமங்களுக்குள் நுழையும் ஒற்றை யானை, விளைநிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல், வாழை, கேழ்வரகு, மா, தென்னை போன்ற பயிா்களை சேதப்படுத்தி விட்டுச் செல்கிறது.

இதற்கிடையே திங்கள்கிழமை இரவு பாலூா் கிராமத்தில் துளசிராமன் வாழைத்தோப்பை சூறையாடி விட்டு, அருகே இருந்த ஜனாா்த்தனன் நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்கம்பி வேலி, கல் கம்பங்களை பிடுங்கி எறிந்துள்ளது. மேலும் மூா்த்தி என்பவரது நிலத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிரை மிதித்து நாசப்படுத்தி விட்டுச் சென்றது. தொடா்ந்து அட்டகாசம் செய்து வரும் ஒற்றை யானையை வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com