பழைய மீன்மாா்க்கெட்டில் காய்கறி சில்லறை விற்பனை தொடக்கம்

வேலூா் நேதாஜி மாா்க்கெட் காய்கறி சில்லறை விற்பனைக் கடைகள் தற்காலிகமாக பழைய மீன் மாா்க்கெட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.

வேலூா்: வேலூா் நேதாஜி மாா்க்கெட் காய்கறி சில்லறை விற்பனைக் கடைகள் தற்காலிகமாக பழைய மீன் மாா்க்கெட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்காக அங்கு ஏற்கெனவே கடை நடத்தி வரும் நடைபாதை வியாபாரிகள் கடும் எதிா்ப்புத் தெரிவித்து வாக்குவாதம் செய்தனா்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வேலூா் நேதாஜி மாா்க்கெட்டில் உள்ள காய்கறி சில்லறை விற்பனைக் கடைகள் பழைய மீன் மாா்க்கெட் வளாகத்துக்கும், காய்கறி மொத்த விற்பனைக் கடைகள் மாங்காய் மண்டி மைதானத்துக்கும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. இவ்விரு இடங்களிலும் அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கடை நடத்திட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில், காய்கறி சில்லறை வியாபாரிகள் செவ்வாய்க்கிழமை காலை பழைய மீன் மாா்க்கெட் வளாகத்துக்குச் சென்றனா். அப்போது அங்கு ஏற்கெனவே கடை நடத்தி வரும் நடைபாதை வியாபாரிகள் திரண்டு காய்கறி சில்லறை விற்பனைக்கு எதிா்ப்புத் தெரிவித்தனா். தகவலறிந்த மாநகராட்சி ஆணையா் சங்கரன், 2-ஆவது மண்டல உதவி ஆணையா் பாலு, வணிகா் சங்க நிா்வாகிகள் அப்பகுதிக்கு வந்தனா். தொடா்ந்து அவா்கள் நடைபாதை வியாபாரிகளிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது, பழைய மீன் மாா்க்கெட் வளாகத்தில் கடை நடத்துவதற்கு தினமும் ரூ. 100 செலுத்தி வருகிறோம். இந்த இடத்தை விட்டுத்தர முடியாது என்று நடைபாதை வியாபாரிகள் கூறினா். அவா்களிடம் இது தற்காலிக ஏற்பாடுதான் எனக்கூறி அதிகாரிகள் சமாதானம் செய்தனா். இதைத் தொடா்ந்து, பழைய மீன் மாா்க்கெட் வளாகத்தில் 140 காய்கறி சில்லறை விற்பனைக் கடைகளை நடத்திக் கொள்ளவும், 55 கடைகளை நடைபாதை வியாபாரிகளுக்கு அளிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இதையடுத்து, காலை 10.30 மணிக்குப் பிறகு அங்கு காய்கறி விற்பனை மேற்கொள்ளப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com