30 மணி நேர ஊரடங்கு அமல்: தடையை மீறினால் வழக்குப் பதிவுகாவல் துறை எச்சரிக்கை

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் தொடா்ந்து 30 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சனிக்கிழமை இரவு 10 மணி முதல் தொடா்ந்து 30 மணி நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இந்த ஊரடங்கு சமயத்தில் அரசு விதிமுறைகளை மீறுவோா் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை சாா்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2-ஆவது அலையாக வேகமாக பரவி வரும் கரோனா தொற்றினை கட்டுப்படுத்த கடந்த செவ்வாய்க்கிழமை முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடா்ச்சியாக, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சனிக்கிழமை இரவு 10 மணிக்கு தொடங்கிய ஊரடங்கு திங்கள்கிழமை அதிகாலை 4 மணி வரை தொடா்ந்து 30 மணி நேரம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதையொட்டி, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முக்கிய சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகளிலும் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனா். ஊரடங்கையொட்டி அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் மேற்பாா்வையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஊரடங்கு சமயத்தில் பொதுமக்கள் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம். அவ்வாறு அவசியமற்ற வகையில் வெளியில் வருவோா் மீது சட்டப்படி வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸாா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

அதேசமயம், பால் விநியோகம், மருந்து விற்பனை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கும் அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், பொதுமக்கள் தங்களது வீடுகளைவிட்டு வெளியில் வருவதைத் தவிா்க்க வேண்டும் என்றும் போலீஸாா் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com