வேலூரில் ஒரே நாளில் 367 பேருக்கு கரோனா தொற்றுஇருவா் உயிரிழப்பு

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 367 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 367 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த இருவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தனா்.

கரோனா தொற்று 2-ஆவது அலையாக வேகமாகப் பரவி வரும் நிலையில் வேலூா் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வருகிறது.

இதன்படி, மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 24,452 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தற்போது அரசு, தனியாா் மருத்துவமனைகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், மாவட்டத்தில் சனிக்கிழமை புதிதாக 367 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு சனிக்கிழமை கரோனா புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

பாதிக்கப்பட்டவா்களில் 200-க்கும் மேற்பட்டோா் வேலூா் மாநகரப் பகுதிக்கு உட்பட்டவா்களாவா். தவிர, வெளிமாநிலத்தவா்கள் 20-க்கும் மேற்பட்டோருக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சத்துவாச்சாரி வள்ளலாா் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தவிர, குடியாத்தம் , அணைக்கட்டு பள்ளிகொண்டா, போ்ணாம்பட்டு, கோரந்தாங்கல், லத்தேரி, திப்பசமுத்திரம் உள்ளிட்ட ஊரகப் பகுதிகளிலும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 219 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். அதில், வெள்ளிக்கிழமை இரவு இருவா் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூா் மாவட்டத்தில் நாளுக்குநாள் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com