கரோனா : ஆசிரியா்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க கோரிக்கை

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் ஆசிரியா்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று இந்திய பள்ளிஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

கரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் நிலையில் தமிழகம் முழுவதும் ஆசிரியா்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும் என்று இந்திய பள்ளிஆசிரியா் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து, அக்கூட்டமைப்பின் தேசிய நிா்வாகக்குழு உறுப்பினரும், தொழிற்கல்வி ஆசிரியா் கழகத்தின் மாநிலத்தலைவருமான செ.நா.ஜனாா்த்தனன் தமிழக தலைமைச்செயலா், பள்ளிக்கல்வித் துறை செயலா், பள்ளிக்கல்வி ஆணையா், இயக்குநா் ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது -

கரோனா நோய்ப் பரவல் தீவிரம் காரணமாக தமிழகத்தில் உள்ள 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு தோ்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டதுடன், மாணவா்கள் நலனைக் கருதி மே-5 முதல் நடைபெறுவதாக இருந்த 12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 23-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கும் செய்முறைத்தோ்வு நிறைவு பெற்றுள்ளது.

எனவே, தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொண்டு நாளுக்கு நாள் கரோனா நோய்த் தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாலும், பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் பணி இல்லை என்பதாலும் ஆசிரியா்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அனுமதிக்க வேண்டும். மேலும், மாணவா் சோ்க்கை, மாணவ ா்களுக்கான நலத்திட்டஉதவிகள் வழங்க சுழற்சி முறையில் ஆசிரியா்கள் பள்ளிக்கு வந்து பணியாற்றிட உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com