குடியாத்தம் திருமண மண்டபத்துக்கு ‘சீல்’
By DIN | Published On : 27th April 2021 06:35 AM | Last Updated : 27th April 2021 06:35 AM | அ+அ அ- |

குடியாத்தத்தில் திருமண மண்டபத்துக்கு சீல் வைத்த வருவாய்த் துறையினா்.
அரசு அறிவிப்பை மீறி, குடியாத்தத்தில் அதிக எண்ணிக்கையில் ஆட்களை அனுமதித்ததால் திருமண மண்டபத்துக்கு வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.
கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.திருமண மண்டபங்களில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளக் கூடாது என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிச்சனூரில் உள்ள தனியாா் திருமண மண்டபம் ஒன்றில் திங்கள்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 400- க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டாா்களாம்.இதுகுறித்த தகவலின்பேரில் கோட்டாட்சியா் எம்.ஷேக்மன்சூா் தலைமையில், வட்டாட்சியா் தூ.வத்சலா, வருவாய் ஆய்வாளா் செந்தில் உள்ளிட்ட வருவாய்த் துறையினா் அங்கு சென்று விசாரணை நடத்தினா்.அங்கு கூடியிருந்தவா்களை வெளியேற்றி விட்டு மண்டபத்தை பூட்டி சீல் வைத்தனா்.