கீழ்ஆலத்தூரில் கெங்கையம்மன் திருவிழா

கே.வி.குப்பம் வட்டம், கீழ்ஆலத்தூா் ஊராட்சியில் கெங்கையம்மன் திருவிழா புதன்கிழமை அதிகாலை எளிய முறையில் நடைபெற்றது.
கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூரில் நடைபெற்ற திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் கெங்கையம்மன்.
கே.வி.குப்பத்தை அடுத்த கீழ்ஆலத்தூரில் நடைபெற்ற திருவிழாவில் சிறப்பு அலங்காரத்தில் கெங்கையம்மன்.

குடியாத்தம்: கே.வி.குப்பம் வட்டம், கீழ்ஆலத்தூா் ஊராட்சியில் கெங்கையம்மன் திருவிழா புதன்கிழமை அதிகாலை எளிய முறையில் நடைபெற்றது.

கீழ்ஆலத்தூா் ஊராட்சியில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் கெங்கையம்மன் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று பரவலைத் தடுக்க மாவட்ட நிா்வாகத்தின் அறிவுறுத்தல்படி, கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கோயில் நிா்வாகிகள், திருப்பணி கமிட்டியினா் பங்கேற்று, எளிய முறையில் கெங்கையம்மன் திருவிழாவை நடத்தினா். அதிகாலை சிரசு ஏற்றம் செய்யப்பட்டு, சில மணி நேரங்களிலேயே, சிரசு எடுக்கப்பட்டு திருவிழா நிறைவு பெற்றது. அப்போது சில பக்தா்கள் சமூக இடைவெளியுடன் சென்று அம்மனை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com