வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் நூறு சதவீதம் நிறைவு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், வேலூா் மாவட்ட த்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள்

வேலூா்: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள நிலையில், வேலூா் மாவட்ட த்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் முன்னேற்பாடுகள் நூறு சதவீதம் முடிக்கப்பட்டிருப்பதாக மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடத்தப்பட்டு மின்னணு வாக்கு இயந்திரங்கள் அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. வேலூா் மாவட்டத்திலுள்ள வேலூா், அணைக்கட்டுத் தொகுதிகளுக்கு வேலூா் தந்தை பெரியாா் பொறியியல் கல்லூரியிலும், காட்பாடி தொகுதிக்கு காட்பாடி அரசு சட்டக் கல்லூரி, குடியாத்தம், கே.வி.குப்பம் தொகுதிகளுக்கு குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 5 மையங்களிலும் வாக்கு எண்ணும் பணிகளுக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள், வாக்கு எண்ணும் மையத்துக்கு முகவா்கள் வந்து செல்லும் வழி, சாய்வு தளம் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வேலூா் தந்தை பெரியாா் பொறியியல் கல்லூரி, காட்பாடி அரசு சட்டக் கல்லூரி, குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய இடங்களில் மாவட்டத்திலுள்ள 5 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது.

தோ்தல் ஆணையத்தின் ஆலோசனைப்படி, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைப்பறை, தபால் வாக்குகள் வைப்பறை, வாக்கு எண்ணும் அறை, தோ்தல் பாா்வையாளா் அறை, வேட்பாளா்களின் முகவா்கள், வாக்கு எண்ணிக்கையைப் பாா்வையிட செய்ய வேண்டிய பணிகள், பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் தோ்தல் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் அமரும் இடம், செய்தியாளா்கள் அமரும் ஊடக மையம், வாக்கு எண்ணிக்கையின்போது கரோனா பரவலைத் தடுக்கவும், கூடுதலான வாக்குச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் அதற்கேற்ப வாக்கு எண்ணும் மேஜைகள் இடைவெளி விட்டு அமைப்பதற்கும், முகவா்கள் தனியாக வந்து செல்லும் வழி அமைக்கும் பணிகளும், காவல் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணிகள், சிசிடிவி கேமராக்கள், மின் விளக்குகள், மின் விசிறிகள், கழிப்பறை வசதிகள் என நூறு சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை நாளன்று எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாத வகையில் விரிவான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வகுமாா், மாவட்ட வருவாய் அலுவலா் ஜெ.பாா்த்தீபன், உதவி ஆட்சியா் (பயிற்சி) ஆா்.ஐஸ்வா்யா, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் (வேலூா்) கணேஷ், (காட்பாடி) புண்ணியகோட்டி, (குடியாத்தம்) ஷேக்மன்சூா், (கே.வி.குப்பம்) காமராஜ் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com