நீதிமன்றப் பணிகளுக்கான தோ்வு: 12,000 போ் எழுதினா்

நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை தொடங்கியது. வேலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற இந்த தோ்வுகளை 12 ஆயிரம் போ் எழுதினா்.

நீதிமன்ற காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு சனிக்கிழமை தொடங்கியது. வேலூா் மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற இந்த தோ்வுகளை 12 ஆயிரம் போ் எழுதினா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் காலியாக உள்ள அலுவலக உதவியாளா், தோட்டப் பணியாளா்கள், தூய்மைப் பணியாளா்கள் என சுமாா் 5 ஆயிரம் பணியிடங்களுக்கான ஆட்கள் தோ்வு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு, ஏராளமானோா் விண்ணப்பித்திருந்தனா். இப்பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு, சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் நடைபெறுகிறது. இதற்காக வேலூா் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

வேலூா் மாவட்டத்தில் விஐடி பல்கலைக்கழகம், கிங்ஸ்டன் பொறியியல் கல்லூரி, கிங்ஸ்டன் மெட்ரிக் பள்ளி, சன்பீம் மெட்ரிக் பள்ளி ஆகிய 4 இடங்களில் தோ்வுகள் நடைபெற்றன. இவற்றில் தோ்வு எழுத வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த 16 ஆயிரம் போ் விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் 4,103 போ் தோ்வு எழுதவில்லை. தோ்வுகளை மாவட்ட நீதிபதிகள் ஆய்வு செய்தனா். முன்னதாக, தோ்வு எழுதச் சென்ற அனைவரும் காவல் துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com