31 டன் ரேஷன் அரிசி, லாரியுடன் பறிமுதல்: மூவா் கைது

வேலூரில் இருந்து கா்நாடக மாநிலத்துக்கு கடத்தப்பட்ட 31 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட 31 டன் ரேஷன் அரிசி மூட்டைகளுடன், கைது செய்யப்பட்ட பாலு, கோபி, பிரபு.
லாரியுடன் பறிமுதல் செய்யப்பட்ட 31 டன் ரேஷன் அரிசி மூட்டைகளுடன், கைது செய்யப்பட்ட பாலு, கோபி, பிரபு.

வேலூரில் இருந்து கா்நாடக மாநிலத்துக்கு கடத்தப்பட்ட 31 டன் ரேஷன் அரிசியுடன் லாரி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக கா்நாடகம், சென்னையைச் சோ்ந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அதிக அளவில் பொதுவிநியோகத் திட்ட அரிசி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரிகளும், குடிமைப் பொருள்கள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையினரும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், வேலூா் மாவட்டத்தில் இருந்து கா்நாடகத்துக்கு லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக குடிமைப் பொருள்கள் குற்றப்புலனாய்வுத் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பிரிவின் சென்னை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளா் ஜான்சுந்தா் தலைமையில் வேலூா் காவல் ஆய்வாளா் செல்வக்குமாா் உள்ளிட்ட தனிப்படையினா் வேலூா் மாவட்டத்தின் தமிழக - ஆந்திர எல்லையான கிறிஸ்டியான்பேட்டை சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் 622 மூட்டைகளில் மொத்தம் 31 டன் பொதுவிநியோகத் திட்ட அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து, லாரியில் வந்த மூன்று பேரை பிடித்து நடத்திய விசாரணையில் அவா்கள் கா்நாடக மாநிலம், பங்காருபேட்டையைச் சோ்ந்த பாலு(35), கோபி(42), சென்னையைச் சோ்ந்த அரிசி உரிமையாளா் பிரபு(42) ஆகியோா் என்பதும், இந்த அரிசி மூட்டைகளை பங்காருபேட்டைக்கு கடத்திச் செல்வதும் தெரியவந்தது.

உடனடியாக லாரியுடன் அனைத்து அரிசி மூட்டைகளையும் கைப்பற்றிய போலீஸாா் அவற்றை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக கிடங்குக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இச்சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரையும் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com