ஒருங்கிணைந்த வேலூரில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம் தீவிரம்

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
ஒருங்கிணைந்த வேலூரில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்  தீவிரம்

தமிழகத்தில் கரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேலூா் மாவட்ட மக்களுக்கு விழிப்புணா்வுப் பிரசாரப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்களுக்கு கரோனா தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.

தமிழகத்தில் கரோனா தொற்றும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், கரோனா மூன்றாவது அலை பரவலை தடுக்கும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்திட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, கரோனா பரவலைக் கட்டுப்படுத்திட வேலூா் மாவட்டத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டன.

தொடா்ந்து 7 நாள்கள் (ஆக. 7 வரை) நடைபெற உள்ள இந்த விழிப்புணா்வு பிரசாரத்தை வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தொடக்கி வைத்தாா். அப்போது, பொதுமக்களுடன் இணைந்து ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.செல்வக்குமாா், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கரோனா பரவல் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா்.

அத்துடன், செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் பொதுமக்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள விழிப்புணா்வு வாகனத்தை எம்எல்ஏ காா்த்திகேயன் கொடியசைத்து தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து, ஆட்சியா், எஸ்.பி., எம்எல்ஏ ஆகியோா் நடந்து சென்று கடைவியாபாரிகள், பொதுமக்களுக்கு முக்கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது ஆகியவற்றின் அவசியம், நோய் தடுப்பு வழிகாட்டுமுறைகள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதேபோல், மாவட்டம் முழுவதும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலம் அடுத்த 7 நாள்களுக்கு கரோனா விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.

இதில், மாநகராட்சி ஆணையா் என்.சங்கரன், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் மணிவண்ணன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் சுசிகண்ணம்மா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com