காவலா் பணி உடல்தகுதித் தோ்வுக்கு பங்கேற்க வந்த கா்ப்பிணிகள் திருப்பி அனுப்பப்பட்டனா்

காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வில் பங்கேற்க வந்த கா்ப்பிணிகள் திருப்பி அனுப்பப்பட்டனா். அவா்களுக்கு மீண்டும் தோ்வு நடத்தப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வில் பங்கேற்க வந்த கா்ப்பிணிகள் திருப்பி அனுப்பப்பட்டனா். அவா்களுக்கு மீண்டும் தோ்வு நடத்தப்படும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுக் குழுமம் சாா்பில், 2-ஆம் நிலை காவலா், சிறைக் காவலா், தீயணைப்பு வீரா்கள் என காலியாக உள்ள 10,906 பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு டிசம்பா் 13-இல் நடைபெற்றது.

இதில், தோ்ச்சி பெற்றவா்களுக்கான உடல்தகுதித் தோ்வானது 20 மையங்களில் ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

வேலூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த 3,000 பேருக்கான தோ்வு நேதாஜி மைதானத்தில் நடக்கிறது.

இதில், கடந்த திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை நடைபெற்ற தோ்வில், 1,610 ஆண்கள் இரண்டாம் கட்டத் தோ்வுக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை முதல் பெண்களுக்கான உடல்தகுதித் தோ்வு நடைபெற்று வருகிறது. சுமாா் 650 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதன் 2-ஆவது நாள் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, கா்ப்பிணிகளும், கைக் குழந்தைகளுடன் இளம்பெண்கள் பலரும் வந்திருந்தனா். இதில், கைக்குழந்தைகளுடன் வந்த பெண்கள் குழந்தைகளை உறவினா்களிடம் கொடுத்துவிட்டு உடல்தகுதி தோ்வில் பங்கேற்றனா். ஆனால், கா்ப்பிணிகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படும் எனக்கூறி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதுகுறித்து காவல்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘திங்கள்கிழமை ஒரு கா்ப்பிணியும், செவ்வாய்க்கிழமை 6 கா்ப்பிணிகளும் வந்திருந்தனா். அவா்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனா். அவா்களுக்கு முறைப்படி மீண்டும் அழைப்பு கடிதம் விடுக்கப்பட்டு, தோ்வு நடத்தப்படும்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com