வேளாண் உள்கட்டமைப்பு நிதியில் கடன் பெற அழைப்பு

வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின்கீழ் விவசாயிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் நரசிம்ம ரெட்டி தெரிவித்தாா்.

வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின்கீழ் விவசாயிகள் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என்று வேலூா் மாவட்ட வேளாண் இணை இயக்குநா் நரசிம்ம ரெட்டி தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கிராம அளவில் வேளாண் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த, கடந்த ஆண்டு முதல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள், வேளாண் தொழில் முனைவோா்களுக்கு ரூ.1 லட்சம் கோடிக்கு கடன் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

இந்தத் திட்டத்தின்கீழ் மின் சந்தையு டன் கூடிய விநியோகத் தொடா் சேவை, சேமிப்புக் கிடங்குகள், சேமிப்புக் கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், விளைபொருள்களை மதிப்பிடுவதற்கான அமைப்புகள், தரம் பிரிப்பு, வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிா்பதன வசதிகள், நுண்ணுயிா் உற்பத்தி நிலையங்கள், நவீன, துல்லியப் பண்ணையத்துக்கான உள்கட்டமைப்புகள், பகுதிக்கேற்ற பயிா் தொகுப்புகளை உருவாக்கி ஏற்றுமதி செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்துதல், அரசு, தனியாா் பங்கேற்புடன் அமைக்கப்படும் உள்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெற முடியும்.

இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.2 கோடி வரை பெறும் கடனுக்கு 7 ஆண்டு காலத்துக்கு ஆண்டிற்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி, சிறு, குறு விவசாய நிறுவனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.32 கோடி கடன் பெறுவதற்கு அரசே கடன் உத்தரவாதம் அளிப்பது போன்ற வசதிகள் செய்து தரப்படும்.

வேளாண் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் தேவைப்படும் கடன் தொகையை அதிகபட்சமாக ஆண்டுக்கு 9 சதவீதத்தில் வழங்கும் வகையில், அகில இந்திய அளவில் 13 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மத்திய அரசுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளன.

இத்திட்டத்தின் கீழ் மொத்தமாக தமிழகத்தில் ரூ.75,990 கோடி அளவுக்கு கடன் வசதி செய்து தர வேளாண் உள்கட்டமை ப்புகளை உருவாக்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண், தோட்டக்கலை அலுவலகங்களை அணுகலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com