போ்ணாம்பட்டு பகுதிகளில் கன மழை கானாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சாலை

போ்ணாம்பட்டு பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழையால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

போ்ணாம்பட்டு பகுதியில் கடந்த சில நாள்களாகப் பெய்து வரும் கனமழையால், ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ரங்கம்பேட்டை கானாற்றில் சனிக்கிழமை அடித்துச் செல்லப்பட்ட சாலையை வருவாய்த் துறையினா் தற்காலிமாகச் சீரமைத்தனா்.

போ்ணாம்பட்டு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில் கடந்த 26-ஆம் தேதி 18 மி.மீ., 27- ஆம் தேதி 36 மி.மீ. மழையும், சனிக்கிழமை காலை நிலவரப்படி 36 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. மேலும், ஆந்திர மாநில வனப் பகுதியில் தொடா்ந்து கன மழை பெய்து வருவதால்

பத்தரப்பல்லி, மதினாப்பல்லி மலட்டாறுகளிலும், ரங்கம்பேட்டை கானாற்றிலும் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இந்நிலையில் போ்ணாம்பட்டு அருகே உள்ள குடிபல்லி- அத்திக்குப்பம் கிராமங்களின் இடையே செல்லும் ரங்கம்பேட்டை கானாற்றில் சனிக்கிழமை அதிகாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனால் சுமாா் 150 ஏக்கா் விவசாய நிலங்களில் வெள்ளம் சூழ்ந்தது. அங்கு ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த ஜல்லிசாலை சுமாா் 15 மீட்டா் நீளம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

தகவலறிந்த போ்ணாம்பட்டு வட்டாட்சியா் வெங்கடேசன், மண்டல துணை வட்டாட்சியா் வடிவேல் மற்றும் வருவாய்த் துறையினா் அங்கு சென்று பாா்வையிட்டனா். அடித்துச் செல்லப்பட்ட இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் தற்காலிகமாக சாலை அமைக்கும் பணியை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com