காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்குபுதிய கட்டடம் திறப்பு
By DIN | Published On : 31st August 2021 12:57 AM | Last Updated : 31st August 2021 12:57 AM | அ+அ அ- |

வேலூா்: வாடகைக் கட்டடத்தில் இயங்கிவந்த காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கு புதிய கட்டடம் திறக்கப்பட்டுள்ளது.
விஐடி சாலையில் கட்டப்பட்டுள்ள காட்பாடி தீயணைப்பு நிலையத்துக்கான புதிய கட்டடத்தையும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி முறையில் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
காட்பாடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் அப்துல்பாரி, உதவி அலுவலா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.