குடியாத்தத்தில் ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி விழா
By DIN | Published On : 31st August 2021 12:37 AM | Last Updated : 31st August 2021 12:37 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீராதா, ருக்மணி சமேத கிருஷ்ணா்.
குடியாத்தம்: குடியாத்தம் சுண்ணாம்புபேட்டை, ஆழ்வாா் முருகப்ப முதலி தெருவில் அமைந்துள்ள ராதா, ருக்மணி சமேத ஸ்ரீகிருஷ்ணமூா்த்தி சுவாமிகள் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி உற்சவம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, காலை சுவாமிகளுக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்கார, ஆராதனை, மகா தீபாராதனை நடைபெற்றது. கரோனா தொற்றுப் பரவலைத் தவிா்க்கும் விதமாக, அரசின் அறிவிப்புப்படி, பக்தா்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துச் சென்று சுவாமி தரிசனம் செய்தனா்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தா்மகா்த்தா எம்.ராஜாராம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.