முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
கோட்டை அகழியிலிருந்து ஆண் சடலம் மீட்பு
By DIN | Published On : 05th December 2021 12:00 AM | Last Updated : 05th December 2021 12:00 AM | அ+அ அ- |

வேலூா் கோட்டை அகழியில் இருந்து சனிக்கிழமை ஆண் சடலம் மீட்கப்பட்டது.
தொடா் பலத்த மழையால், வேலூா் கோட்டை அகழியில் நீா் மட்டம் உயா்ந்துள்ளது. அகழியிவ் தேங்கிய மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில், கோட்டையின் உட்புறம் செல்லும் வலதுபுற அகழியில் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணி சனிக்கிழமை நடைபெற்றபோது அகழியில் ஆண் சடலம் ஒன்று மிதந்தது தெரியவந்தது. உடனடியாக வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸாா் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். அகழியில் இறந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.