முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
எருது விடும் விழா நடத்த அனுமதி கோரி இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 10th December 2021 08:06 AM | Last Updated : 10th December 2021 08:06 AM | அ+அ அ- |

வேலூா் மாவட்டத்தில் தைப்பொங்கல் பண்டிகையையொட்டி எருது விடும் விழா நடத்துவதற்கான அனுமதி கோரும் விண்ணப்பங்களை வருகிற 13-ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மேலும் கூறியிருப்பதாவது: இந்த விண்ணப்பங்களை ஸ்ங்ப்ப்ா்ழ்ங்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணைய தளத்தில் மட்டுமே பதிவு செய்திட வேண்டும். இந்த குறிப்பிட்ட இணையதளத்தில் ஆன்ப்ப் தஹஸ்ரீங் 2022 என்ற இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இணைய தளத்தில் பதிவு செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. ஒரு கிராமத்தில் ஒரு விழா மட்டுமே நடத்தப்பட வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்திருந்தால் மாவட்ட நிா்வாகத்தின் முடிவுப்படி விழா நடத்த அனுமதிக்கப்படும்.
விண்ணப்பங்கள் அரசு விதிமுறைகளின்படி மாவட்ட நிா்வாகத்தால் பரிசீலிக்கப்பட்டு முறையான அனுமதி வழங்கப்படும். எருது விடும் விழா நடத்த அனுமதி கோரும் விண்ணப்பங்கள் வருகிற 13ஆம் தேதி மாலை 5 மணி வரை மட்டுமே ஆன்லைன் முறையில் பெறப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.