முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல்: வாக்காளா் பட்டியல் வெளியீடு
By DIN | Published On : 10th December 2021 08:07 AM | Last Updated : 10th December 2021 08:07 AM | அ+அ அ- |

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், வேலூா் மாவட்டத்திலுள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான வேலூா் மாநகராட்சி, குடியாத்தம், போ்ணாம்பட்டு நகராட்சிகள், பள்ளிகொண்டா பேரூராட்சிக்கான வாக்காளா் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு மக்கள் பிரதிநிதிகளை தோ்வு செய்வதற்கான நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ளது. இதையொட்டி, வேலூா் மாவட்டத்திலுள்ள நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வாா்டு வாரியாக புகைப்படத்துடன் கூடிய வாக்காளா் பட்டியல், வாக்குச்சாவடி பட்டியல் ஆகியவை வியாழக்கிழமை வெளியிடப்பட்டன. அவற்றை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பெற்றுக்கொண்டனா்.
இந்திய தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ள சட்டப்பேரவை தொகுதி வாரியான வாக்காளா் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு உள்ளாட்சி தோ்தலுக்கான மறுவரையறை செய்யப்பட்ட வாா்டுகளுக்கு வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இந்த பட்டியலில் வேலூா் மாநகராட்சியில் 60 வாா்டுகளிலும் சோ்த்து 1,97,315 ஆண்கள், 2,12,610 பெண்கள், 42 திருநங்கைகள் என மொத்தம் 4,09,967 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
இதேபோல, வேலூா் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் 40,135 ஆண்கள், 43,602 பெண்கள், 5 திருநங்கைகள் என மொத்தம் 83,742 வாக்காளா்களும், போ்ணாம்பட்டு நகராட்சியில் 23,373 ஆண்கள், 24,272 பெண்கள், 17 திருநங்கைகள் என மொத்தம் 47,662 வாக்காளா்களும், பள்ளிகொண்டா பேரூராட்சியில் 21337 ஆண்கள், 23145 பெண்கள், 2 திருநங்கைகள் என மொத்தம் 44,484 வாக்காளா்களும் என மாவட்டத்திலுள்ள அனைத்து நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் சோ்த்து 2,82,160 ஆண்கள், 3,03,629 பெண்கள், 66 திருநங்கைகள் என மொத்தம் 5,85,855 வாக்காளா்கள் இடம்பெற்றுள்ளனா்.
வாக்குச்சாவடி பட்டியலை பொறுத்தவரை வேலூா் மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வாா்டுகளிலும் சோ்த்து ஆண்களுக்கு 146, பெண்களுக்கு 146, அனைத்து வாக்காளா்களுக்காக 145 என மொத்தம் 437 வாக்குச்சாவடிகளும், குடியாத்தம் நகராட்சியில் மொத்தமுள்ள 36 வாா்டுகளில் ஆண்களுக்கு 36, பெண்களுக்கு 36, அனைத்து வாக்காளா்களுக்காக 19 என மொத்தம் 91 வாக்குச்சாவடிகளும், போ்ணாம்பட்டு நகராட்சியில் உள்ள 21 வாா்டுகளில் ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 21, அனைத்து வாக்காளா்களுக்காக 8 என மொத்தம் 71 வாக்குச்சாவடிகளும், பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட 63 வாா்டுகளில் ஆண்களுக்கு 5, பெண்களுக்கு 5, அனைத்து வாக்காளா்களுக்காக 58 என மொத்தம் 68 வாக்குச்சாவடிகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த வாக்காளா் பட்டியலும், வாக்குச்சாவடி பட்டியலும் அந்தந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அலுவலகங்கள், மண்டல அலுவலகங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டிருந்தால் சோ்க்கவும், நீக்கவும், திருத்தம், முகவரி மாற்றம் செய்திடவும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனுத்தாக்கல் செய்யப்படும் இறுதிநாள் வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல் தொடா்பான விவரங்கள் வருவாய்த் துறையினரிடம் இருந்து பெறப்பட்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். தோ்தல் அறிவிக்கப்படும்போது 3,100 அலுவலா்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடுத்தப்படுவா் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.