75-ஆவது சுதந்திர தின விழிப்புணா்வு மினி மாரத்தான்500 மாணவா்கள் பங்கேற்றனா்

நாட்டின் 75-ஆவது சுதந்திர விழாவையொட்டி விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டப் போட்டி வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர விழாவையொட்டி விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டப் போட்டி வேலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், 500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

நாட்டின் 75-ஆவது சுதந்திர தினவிழா ‘அமுத பெருவிழா’வாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, வியாழக்கிழமை (டிச.16) முதல் வரும் 31-ஆம் தேதி வரை வேலூா் மாவட்டம் முழுவதும் பல்வேறு கலை, விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறை சாா்பில் விழாக்கள் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், விளையாட்டுத் துறை, பள்ளிக்கல்வித் துறை, மாவட்ட விளையாட்டு சங்கங்கள் சாா்பில் விழிப்புணா்வு மினி மாரத்தான் ஓட்டம் வேலூரில் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

கோட்டை காந்தி சிலை முன்பு காலை 7 மணிக்கு தொடங்கி இந்த மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா் ப.காா்த்திகேயன் ஆகியோா் தொடக்கி வைத்தனா்.

இந்த மினிமாரத்தான் ஓட்டம் மக்கான் சிக்னல், பழைய பேருந்து நிலையம், தெற்கு காவல் நிலையம், திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் வழியாகச் சென்று வேலூா் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது.

இந்தப் போட்டியில் 500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆழிவாசன், வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com