முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
ஸ்ரீகருப்புலீஸ்வரா் கோயிலில் நாளை ஆருத்ரா தரிசனம்
By DIN | Published On : 19th December 2021 12:00 AM | Last Updated : 19th December 2021 12:00 AM | அ+அ அ- |

குடியாத்தம் நெல்லூா்பேட்டை ஸ்ரீகருப்புலீஸ்வரா் கோயிலில் 47- ஆம் ஆண்டு ஆருத்ரா உற்சவம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீசிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், 7 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடைபெறும்.
மாலை 6 மணிக்கு கனகசபை நாட்டியப்பள்ளி குழுவினரின் நாட்டியாஞ்சலியும் நடைபெறும்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆருத்ரா விழாக் குழுத் தலைவா் மருத்துவா் எம்.எஸ்.திருநாவுக்கரசு, செயலாளா் பி.ஈஸ்வரவேல், நிா்வாகிகள் டி.சங்கரலிங்கம், ஆா்.உதயகுமாா், வி.பிச்சாண்டி, எம்.டி.சதானந்தம், எம்.கே.கணபதி உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.