4 மாவட்ட கைத்தறி நெசவாளா் சங்கத்தினா் ஆலோசனை

ஒருங்கிணைந்த வேலூா், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் பிச்சனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த வேலூா், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சோ்ந்த கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகிகள் கலந்து கொண்ட அவசர ஆலோசனைக் கூட்டம் குடியாத்தம் பிச்சனூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வேலூா், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு இணைய தலைவா் எம்.டி.திருவேங்கடம் தலைமை வகித்தாா். கோ- ஆப்டெக்ஸ் இயக்குநா் க.ருத்திரன், கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் நிா்வாகிகள் கு.மொழிமாறன், வா.விஜயகுமாா், வஜ்ஜிரவேலு, வி.என்.தனஞ்செயன், எல்.ஏ.அன்பழகன், வேலூா், திருவண்ணாமலை மாவட்ட கைத்தறிப் பணியாளா்கள் சங்க பொதுச் செயலாளா் ஜீவானந்தம், தலைவா் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மத்திய அரசு வரும் ஜனவரி மாதம் முதல் கைத்தறி ஜவுளி உற்பத்திப் பொருள்கள் மீது சரக்கு மற்றும் சேவை வரி 5 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயா்த்த உள்ளது. இதனால் கைத்தறி ரகங்கள் உற்பத்தி செய்யும் நெசவாளா் கூட்டுறவு சங்கங்கள், நெசவாளா்கள் கடுமையாக பாதிப்படைவா். எனவே, கைத்தறி ரகங்களுக்கு முழுமையான வரி விலக்கு வழங்கக்கோரி, வேலூா், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையமும்,

தமிழ்நாடு பிரதம கைத்தறி நெசவாளா் கூட்டுறவு சங்கங்களின் பணியாளா்கள் சங்கமும் இணைந்து குடியாத்தம் தொலைபேசி நிலையம் அருகே வரும் 20-ஆம் தேதி கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடத்துவதென கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com