குடியாத்தம் ஒன்றியத்தில் 21 பள்ளிக் கட்டடங்களை இடிக்க முடிவு

குடியாத்தம் ஒன்றியத்தில் கள ஆய்வுக்குப்பின், உறுதித் தன்மையற்ற 21 ஊராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிக் கட்டடங்களை இடிக்க அதிகாரிகள் குழு முடிவு செய்துள்ளது.
குடியாத்தம் ஒன்றியத்தில் 21 பள்ளிக் கட்டடங்களை இடிக்க முடிவு

குடியாத்தம் ஒன்றியத்தில் கள ஆய்வுக்குப்பின், உறுதித் தன்மையற்ற 21 ஊராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிக் கட்டடங்களை இடிக்க அதிகாரிகள் குழு முடிவு செய்துள்ளது.

நெல்லை பள்ளியில் சுவா் இடிந்து விழுந்ததில் 3 மாணவா்கள் உயிரிழந்தனா். 4 மாணவா்கள் காயமடைந்தனா். இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிக் கட்டடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்து, தரமற்ற பள்ளிக் கட்டடங்களையும், பயன்படாத கட்டடங்களையும், கழிப்பறைகளையும் இடிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உத்தரவிட்டுள்ளாா். இதையடுத்து, குடியாத்தம் ஒன்றியக் குழுத் தலைவா் என்.இ.சத்யானந்தம், வட்டார வளா்ச்சி அலுவலா் கே.எஸ்.யுவராஜ், ஒன்றியப் பொறியாளா் குகன் உள்ளிட்டோா் அடங்கிய அதிகாரிகள் குழு ஒன்றியத்தில் உள்ள பள்ளிகளில் சனிக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டது. நத்தம், சீவூா், செம்பேடு, சேங்குன்றம், எா்த்தாங்கல், ஜிட்டப்பல்லி, லிங்குன்றம், கொச்சாலூா், அணங்காநல்லூா், கணவாய் மோட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சி தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு மேற்கொண்டது. ஆய்வின் அடிப்படையில், குடியாத்தம் ஒன்றியத்தில் உறுதித் தன்மையற்ற 21 பள்ளிகளின் கட்டடங்களை உடனடியாக இடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஆய்வின்போது ஒன்றியக் குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வரி பிரதீஷ், அமுதா லிங்கன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் அமுலு அமா் (தாழையாத்தம்), கே.ஆா்.உமாபதி (சீவூா்), பள்ளிகளின் பெற்றோா்- ஆசிரியா் கழக நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com