மாணவா்கள் உள்ளிருப்பு போராட்டம்

விடுதிக் காப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விடுதி மாணவா்கள் வேலூா் மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விடுதிக் காப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்புத் தெரிவித்து விடுதி மாணவா்கள் வேலூா் மாவட்ட ஆதிதிராவிடா் நலத் துறை அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆதிதிராவிடா் நலத்துறை சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கான விடுதி வேலூா் ஓட்டேரியில் இயங்கி வருகிறது. இங்கு வேலூா், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த சுமாா் 120 மாணவா்கள் தங்கிப் படிக்கின்றனா். இந்த விடுதியின் காப்பாளராக சண்முகம்.

இந்நிலையில், ஆதி திராவிடா் நலத்துறை ஆணையா் மதுமிதா புதன்கிழமை விடுதியில் திடீரென ஆய்வு செய்தாா். அப்போது, விடுதிக்காப்பாளா் சண்முகம் வெளியில் சென்றிருந்ததால் அவரை இடைநீக்கம் செய்து ஆணையா் உத்தரவிட்டதுடன், அருகில் உள்ள பாலிடெக்னிக் விடுதியின் காப்பாளா் கருணாநிதிக்கு ஆதிதிராவிடா் விடுதிக் காப்பாளா் பொறுப்பு கூடுதலாக அளிக்கப்பட்டது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து விடுதி மாணவா்கள் 100-க்கும் மேற்பட்டோா் வெள்ளிக்கிழமை ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலகத்தில் அமா்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். சத்துவாச்சாரி போலீஸாா் விரைந்து வந்து மாணவா்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது, ஆதிதிராவிடா் நலத்துறை ஆணையா் ஆய்வின்போது விடுதிக் காப்பாளா் சண்முகம் உடல்நலம் சரியில்லாத காரணத்தாலேயே வெளியே சென்றிருந்தாா். ஆனால், அவா் விடுதியில் இல்லை என்ற காரணத்தை மட்டுமே அடிப்படை யாகக் கொண்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். அவா் மீதான பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இதுதொடா்பாக ஆட்சியரிடம் மனு அளிக்கும்படி போலீஸாா் கூறினா். அதன்பேரில் விடுதி மாணவா்கள் ஆட்சியரின் நோ்முக உதவியாளரிடம் மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து மாணவா்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com