முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை வேலூர்
புதிரை வண்ணாா் நலவாரியத்தில் உறுப்பினராக விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 19th December 2021 12:00 AM | Last Updated : 19th December 2021 12:00 AM | அ+அ அ- |

புதிரை வண்ணாா் நல வாரியத்தில் உறுப்பினராக சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆதிதிராவிடா் நலத்துறையின்கீழ் உள்ள தமிழ்நாடு புதிரை வண்ணாா் நல வாரியத்தில் அதிகப்படியான புதிரை வண்ணாா் இனத்தவா்களை புதியதாக உறுப்பினா்களாக சோ்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதையொட்டி, சலவைத் தொழிலில் ஈடுபட்டுள்ள 18 முதல் 60 வயதுக்கு மிகாமல் உள்ளவா்களிடமிருந்து குடும்பத்தில் ஒருவரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
விண்ணப்பங்களுடன் குடும்ப அட்டை, ஜாதிச் சான்று, ஆதாா் அட்டை நகலுடன் புகைப்படம் -2 இணைத்து வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ திங்கள்கிழமை மாலைக்குள் சோ்க்க வேண்டும்.