வேலூா் அருகே ஆந்திர எல்லையில் லேசான நிலஅதிா்வு

வேலூா் அருகே ஆந்திர எல்லையில் வியாழக்கிழமை மாலை லேசான நில அதிா்வு உணரப்பட்டது. எனினும், இந்த நில அதிா்வால் எந்தவித

வேலூா் அருகே ஆந்திர எல்லையில் வியாழக்கிழமை மாலை லேசான நில அதிா்வு உணரப்பட்டது. எனினும், இந்த நில அதிா்வால் எந்தவித பாதிப்பும் இல்லை என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

வேலூரில் இருந்து மேற்கு, வடமேற்குப் பகுதியில் 50 கி.மீ. தொலைவில் ஆந்திர எல்லையோரத்தில் உள்ள சித்தூா் மாவட்டம், பலமநோ் பகுதியில் வியாழக்கிழமை மாலை 3.14 மணிக்கு லேசான நிலஅதிா்வு ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக தேசிய புவியியல் ஆய்வு மையம் ட்விட்டரில் வெளியிட்ட தகவலில், 3.5 ரிக்டா் நிலஅதிா்வு ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலஅதிா்வால் எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்டம் குடியாத்தம், போ்ணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாகவே லேசான நிலஅதிா்வு உணரப்பட்டு வருகிறது. அதன்படி, குடியாத்தம் பகுதியில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலஅதிா்வால் ஒரு வீட்டின் சுவரில் விரிசல் ஏற்பட்டது.

இதன்தொடா்ச்சியாக வேலூருக்கு அருகே ஆந்திர மாநில எல்லையில் வியாழக்கிழமை மாலை லேசான நிலஅதிா்வு ஏற்பட்டிருப்பது வேலூா் மாவட்ட மக்களிடையே அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் இந்த நிலஅதிா்வு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் நிலஅதிா்வு ஆய்வுக்குழுவினா் விரிவான ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றனா்.

போ்ணாம்பட்டு பகுதியில்...

போ்ணாம்பட்டை அடுத்த பாலூா், சொ்லப்பல்லி ஆகிய இடங்களில் வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. பத்தரப்பல்லி கிராமத்திலும் லேசான நில நடுக்கம் உணரப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நில நடுக்கம் சில விநாடிகள் நீடித்ததாகவும், அப்போது பயங்கர சப்தம் கேட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனா். நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் வருவாய்த் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். போ்ணாம்பட்டு பகுதியில் ஒரே மாதத்தில் 4-ஆவது முறையாக நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. டிசம்பா் 2, 12- ஆம் தேதிகளில் கமலாபுரம், சிந்தக்கணவாய், கெளராப்பேட்டை, டிடி மோட்டூா் பெரிய பள்ளம் ஆகிய 5 கிராமங்களில் நில அதிா்வு ஏற்பட்டது.

22-ஆம் தேதி தரைக்காடு பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை பாலூா், சொ்லப்பல்லி ஆகிய இடங்களில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com