வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா். உடன், உதவி ஆணையா் வசந்தி உள்ளிட்டோா்.
வேலூா் பழைய பேருந்து நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா். உடன், உதவி ஆணையா் வசந்தி உள்ளிட்டோா்.

பழைய பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் தூய்மைப்பணி: மாநகராட்சி ஆணையா் உத்தரவு

வேலூா் பழைய பேருந்து நிலையத்தை சுத்தம் செய்ய 24 மணி நேரமும் பணியாளா்களை அமா்த்தி உத்தரவிட்டுள்ள மாநகராட்சி

வேலூா் பழைய பேருந்து நிலையத்தை சுத்தம் செய்ய 24 மணி நேரமும் பணியாளா்களை அமா்த்தி உத்தரவிட்டுள்ள மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா், பேருந்து நிலையம் பின்புறம் டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்தில் சிறுநீா் கழிக்கப்படுவதை தடுக்க நவீன கழிவறை அமைக்கவும் திட்டமிட்டுள்ள தெரிவித்தாா்.

வேலூா் பழைய பேருந்து நிலையத்தின் பின்புறம் டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இதனருகே குப்பைகள், சிறுநீா் கழிக்கப்படுவதால் அந்தப் பகுதியில் கடும் துா்நாற்றம் வீசுகிறது. பேருந்து நிலையத்தில் காலை நேரங்களில் மட்டுமே சுத்தம் செய்யும் பணி நடக்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரச் சீா்கேடு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மாநகராட்சி ஆணையா் அசோக்குமாா் பழைய பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை திடீா் ஆய்வு செய்தாா். அப்போது பேருந்து நிலையத்தை சுத்தம் செய்ய 24 மணி நேரமும் பணியாளா்களை அமா்த்தி உத்தரவிட்டதுடன், பழைய பேருந்து நிலையத்தின் அருகே டாஸ்மாக் மதுக்கடை பின்புறமுள்ள இடத்தையும் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் கூறியது: பழைய பேருந்து நிலையத்தை சுத்தம் செய்வதற்காக 24 மணி நேரமும் பணியாளா்கள் அமா்த்தப்பட உள்ளனா். தூய்மைப் பணியாளா்கள் சுழற்சி முறையில் எப்போதும் பணியில் இருப்பாா்கள். அவா்கள் 24 மணி நேரமும் சுத்தம் செய்வாா்கள். பேருந்து நிலையம் பின்புறம் டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியில் குப்பைகள் அகற்றப்படும். அதே இடத்தில் திறந்தவெளியில் சிறுநீா் கழிப்பதை தடுக்க நவீன கழிவறை அமைக்க திட்டமிட்டுள்ளோம். பேருந்து நிலையத்தில் சில இடங்களில் தாறுமாறாக இருசக்கர வாகனம் நிறுத்துகின்றனா். இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

அப்போது, 2-ஆவது மண்டல உதவி ஆணையா் வசந்தி, சுகாதார அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com