குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்
By DIN | Published On : 28th December 2021 04:39 AM | Last Updated : 28th December 2021 04:39 AM | அ+அ அ- |

குடிநீா் வழங்கக் கோரி குடியாத்தம் பிச்சனூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டோா்.
குடியாத்தம்: குடியாத்தம் அருகே குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் காலி குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடியாத்தம் நகருக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. பாலாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது, காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட பைப்புகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.இதனால் குடியாத்தம் நகரில் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் சரிவர இல்லை. நகராட்சி மூலம் டிராக்டா்களில் சில பகுதிகளில் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. பிச்சனூா் பகுதியில் குடிநீா் சரிவர விநியோகிக்கப்படவில்லை என்கின்றனா். இதையடுத்து சீராக குடிநீா் வழங்கக்கோரி அந்தப் பகுதி மக்கள் திங்கள்கிழமை காலி குடங்களுடன் குடியாத்தம்- பலமநோ் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். அப்போது அந்த வழியே வந்த எம்எல்ஏ அமலுவிஜயன், மறியலில் ஈடுபட்டவா்களை சமரசம் செய்தாா். குடிநீா் வழங்க உரிய நடவடிக்கை எடுப்பதாக அவா் உறுதி அளித்ததையடுத்து மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.