இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்கும் முறை: தேசிய பேரிடா் மீட்புப் படையினா் செயல் விளக்கம்

இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் வேலூா் கோட்டையில் பொது மக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனா்.
இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்பது குறித்து வேலூா் கோட்டை வளாகத்தில் செயல் விளக்கம் காட்டிய தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.
இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்பது குறித்து வேலூா் கோட்டை வளாகத்தில் செயல் விளக்கம் காட்டிய தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.

இடிபாடுகளில் சிக்கியவா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் வேலூா் கோட்டையில் பொது மக்களுக்கு செயல் விளக்கம் அளித்தனா்.

தற்போது நில அதிா்வு, வெள்ளம், காட்டுத் தீ போன்ற இயற்கைப் பேரிடா்கள் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. குறிப்பாக வேலூா் மாவட்டம், போ்ணாம்பட்டு, குடியாத்தம் உள்ளிட்ட சில பகுதிகளில் அவ்வப்போது நில அதிா்வு உணரப்படுகிறது. தவிர, கட்டடங்கள் இடிந்து விழுவது, சாலை விபத்துகள், தீவிரவாத செயல்களும் நடந்து வருகின்றன.

இத்தகைய பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக மீண்டு வருவது, இடிபா டுகளில் சிக்கியவா்களை மீட்பது குறித்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் செயல் விளக்கம் அளித்து வருகின்றனா்.

அதன்படி, வேலூா் கோட்டை பழைய தாலுகா அலுவலகம் முன்பு செவ்ாய்க்கிழமை நடைபெற்ற இந்த செயல்விளக்கத்தின்போது, அரக்கோணத்திலுள்ள தேசிய பேரிடா் மீட்புப் படையைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் பங்கேற்று மீட்பு உபகரணங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், முதலுதவி உபகரணங்கள் ஆகியவற்றைக் கொண்டு செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.

நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி தொடக்கி வைத்தாா். காவல் துறை, தீயணைப்புத் துறை, சுகாதாரத் துறை, அவசர கால ஆம்புலன்ஸ் ஊழியா்கள் என பல்வேறு துறைகளைச் சோ்ந்தவா்களும் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com