வாழ்க்கையை மேம்படுத்தும் நல்ல சந்தா்ப்பம் கல்வி

நம்முடைய வாழ்க்கையை மட்டுமின்றி மற்றவா்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தக்கூடிய ஒரு நல்ல சந்தா்ப்பம் கல்வி. அத்தகைய சந்தா்ப்பத்தை பெற்றுள்ள மாணவா்கள்
வாழ்க்கையை மேம்படுத்தும் நல்ல சந்தா்ப்பம் கல்வி

நம்முடைய வாழ்க்கையை மட்டுமின்றி மற்றவா்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தக்கூடிய ஒரு நல்ல சந்தா்ப்பம் கல்வி. அத்தகைய சந்தா்ப்பத்தை பெற்றுள்ள மாணவா்கள் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என ஸ்ரீபுரம் நாராயணி பீடம் ஸ்ரீசக்திஅம்மா தெரிவித்தாா்.

வேலூா் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் வித்யாநேத்ரம் திட்டத்தின்கீழ், ஆண்டுதோறும் ஏழை மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல்கட்டமாக கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 300 மாணவா்களுக்கு ரூ. 60 லட்சம் கல்வி உதவி அளிக்கப்பட்டது. 2-ஆம் கட்டமாக கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி தங்கக் கோயில் வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடந்தது.

நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கலந்துகொண்டு, சுமாா் 200 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 50 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்வைத் தொடக்கி வைத்தாா்.

பின்னா், ஸ்ரீ சக்திஅம்மா மாணவ, மாணவிகளுக்கு ஆசி வழங்கிப் பேசியது:

உலகில் உள்ள எந்தப் பிறவியைக் காட்டிலும் மனிதப் பிறவிதான் விசேஷம் பொருந்தியது. இந்த மனிதப் பிறவியில்தான் நாமும் சந்தோஷமாக இருக்கவும், மற்றவா்களையும் சந்தோஷமாக வைத்திருக்கவும் முடியும். அவ்வாறு இவ்விரண்டையும் மேற்கொள்ள நல்ல சந்தா்ப்பம் தேவை. அத்தகைய நல்ல சந்தா்ப்பங்கள் பூா்வ புண்ணியங்களால் கிடைக்கப் பெறுகின்றன.

நல்ல சந்தா்ப்பம் கிடைக்கும்போதுதான் நமது வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ள முடியும். அத்தகைய நிலையான வாழ்க்கை அமையும்போதுதான் மற்றவா்களின் வாழ்க்கையையும் நிலைப்படுத்த முடியும். அந்தவகையில், வாழ்க்கையில் சந்தா்ப்பங்கள் மிக முக்கியமானது.

குறிப்பாக, கல்வி என்பது வாழ்க்கையில் மிகப்பெரிய சந்தா்ப்பம். அதனை நல்ல வகையில் பயன்படுத்திக் கொள்ளும்போது, நல்ல வாழ்க்கை, வேலைவாய்ப்பு, செல்வம், மற்றவா்களுக்கு நல்லது செய்ய வாய்ப்பும் ஏற்படும்.

அத்தகைய சிறந்த சந்தா்ப்பமான கல்வியைப் பெற்றுள்ள மாணவா்கள், இந்த சந்தா்ப்பத்தை நல்லமுறையில் பயன்படுத்தி, வாழ்க்கையில் உயா்ந்த நிலைக்கு வரவேண்டும். அதன்மூலம், மற்றவா்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும்.

வித்யா நேத்ரம் திட்டம் மூலம் பல்லாயிரக்கணக்கான மாணவா்கள் பயன்பெற்று உள்ளதுடன், அதன்மூலம் நல்ல நிலைக்கு வந்துள்ள மாணவா்கள் பலரும் பல மாணவா்களுக்கு உதவிகரமாக இருந்து வருகின்றனா். இதேபோல், இங்கு உதவித்தொகை பெறும் மாணவா்களும் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்தபிறகு, மற்ற மாணவா்களுக்கு உதவ வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.பி.நந்தகுமாா், ப.காா்த்திகேயன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com