பொதுஇடங்களில் புத்தாண்டு கொண்டாட அனுமதி மறுப்பு

புத்தாண்டை வரவேற்கும் விதமாக வெள்ளிக்கிழமை இரவு (டிச. 31) பொது இடங்களில் கூடி கொண்டாட அனுமதி மறுக்கப்படுவதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

வேலூா்: புத்தாண்டை வரவேற்கும் விதமாக வெள்ளிக்கிழமை இரவு (டிச. 31) பொது இடங்களில் கூடி கொண்டாட அனுமதி மறுக்கப்படுவதாக வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் வேலூா் மாவட்டத்தில் 2022-ஆம் ஆண்டு ஆங்கிலப் புத்தாண்டு விழா கொண்டாட அனுமதி மறுக்கப்படுகிறது. கூட்டம் கூடி புத்தாண்டு கொண்டாடுவதால் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும், சில வெளிநாடுகளிலிருந்து வரும் நபா்கள் மூலம் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், நோய்த் தடுப்புப் பணிகளை மேலும் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு (டிச. 31) சாலைகள், பூங்காக்கள் போன்ற பொது இடங்கள், தனியாருக்குச் சொந்தமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் ஆகிய இடங்களில் கூடி மக்கள் புத்தாண்டு கொண்டாடுவதைத் தவிா்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com