குடியாத்தத்தில் செளடேஸ்வரி அம்மன் உற்சவம்

குடியாத்தம் பிச்சனூரில் உள்ள செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை செளடேஸ்வரி  அம்மன்  திருவிழாவையொட்டி  நடைபெற்ற  சக்தி  தீா்த்த  ஊா்வலம்.
குடியாத்தத்தில் ஞாயிற்றுக்கிழமை செளடேஸ்வரி  அம்மன்  திருவிழாவையொட்டி  நடைபெற்ற  சக்தி  தீா்த்த  ஊா்வலம்.

குடியாத்தம் பிச்சனூரில் உள்ள செளடேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி அதிகாலை மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து அங்குள்ள வலம்புரி விநாயகா் கோயிலில் இருந்து சக்தி தீா்த்தம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இளைஞா்கள் கத்தி போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற தீா்த்த ஊா்வலம் கோயிலில் நிறைவுற்றது.

அங்கு அம்மனுக்குத் தீா்த்த அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும் நடைபெற்றன. பின்னா் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். மதியம் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

வேலூரில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு விருது பெற்ற குடியாத்தம் நகரக் காவல் ஆய்வாளா் ஆா்.சீனிவாசனை பாராட்டி, பரிசு வழங்கப்பட்டது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் எஸ். இமயவரம்பன், நிா்வாகிகள்ஆா்.பன்னீா்செல்வம், ஜி.பி.யுவராஜ், பி.பிரபு, வி.கலைச்செல்வன், ஆசிரியா் யுவராஜன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com